எங்களைப் பற்றி

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.   (குறள் – 396)

நோக்கம்:

தமிழக மாணவ/ மாணவியர்கள் அறிவியலில் சிறந்து விளங்குவதற்கு தேவையான ஊக்கமும், பயிற்சியும் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் E2 Academy (e-Education Academy) துவங்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் NET exam என சொல்லக்கூடிய தேசிய தகுதித் தேர்வு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த தேர்வுக்கு பயிற்சிப் பெறுவதற்கு, இன்றும் நம் தமிழக மாணவர்கள், மற்ற மாநிலங்களுக்கு சென்று மிகப்பெரியத் தொகையைச் செலுத்தி பயின்று வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகைப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அதனால் அனைத்து மாணவர்களும் இவ்வித பயிற்சியில் பங்குகொள்ளாமல் போகமுடிகிறது. அதுவும் ஆறு மாத காலத்திற்கு ரூ. 30,000/- வரை கட்டணம் வசூலிக்கின்றனர். அதனால் பல மாணவர்களுக்கு இது எட்டாக்கனியாக திகழ்கிறது.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், இங்கு உள்ள தேசிய கல்வி நிறுவனங்களான IIT Madras, NIT Trichy மற்றும் Central Universty of Tamilnadu ஆகியவற்றில் பயிலுகின்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளன . அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று சரியான வழிகாட்டல் மற்றும் பயிற்சி இல்லை. மேலும், இன்றைய கொரோனா பாதிப்பு காலக்கட்டத்தில் தினசரி பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதும் இயலாத காரியமாகும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, அனைத்துவித மாணவர்களுக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான பயிற்சி அளிக்கவும், அனைவரும் உயர்கல்வியில் சேர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் E2 Academy (e-Education Academy) துவங்கப்பட்டுள்ளது.

E2 Academy யின் அனைத்து வகுப்புகளும் நவீண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முற்றிலும் இணைய வழியாக நடத்தப் படுகின்றது. இந்த அகாடமியில் நடைபெறும் அனைத்து வகுப்புகளும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது. குறிப்பாக பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்று தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்து, மத்திய அரசு கல்வி நிலையங்களில் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்களால் நடத்தப்படுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் முதல் அனைவரும் வீட்டில் இருந்தபடியே மிகக்குறைந்த செலவில் பயன்பெற முடிகிறது.

முதலாவதாக, E2 Academy மூலம், கணித அடிப்படை பயிற்சி வகுப்புகள் (Fundamental Course Series on Mathematics) தொடங்கி உள்ளோம். இரு கை தட்டினால் தான் ஓசை வரும். ஒரு கையாக இருக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். மற்றொரு கையாக நீங்கள் இருந்தால் வெற்றி நிச்சயம். தினமும் நீங்கள் ஒரு மணி நேரம் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் நீங்கள் கணிதத்தில் சிறந்தவர்களாக எங்களால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

“இணையுங்கள்! இணைந்தே கற்போம்!”